சிங்கப்பூர் விஜயத்தை முடித்து நாடு திரும்பினார் ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka
Singapore
By Vanan
அதிபர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
அதிபர் உட்பட 10 பேர் கொண்ட தூதுக்குழு நேற்று (22) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-468 என்ற விமானத்தில் அதிபரும் அவரது தூதுக்குழுவும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு தரப்பு பேச்சுவார்த்தை

இந்த விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் அதிபர், பிரதமர் உள்ளிட்ட இராஜதந்திரிகளை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிபரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.