சர்ச்சையை கிளப்பிய ஜனாதிபதி கூறிய அந்த வார்த்தை!
கண்டியில் ஜனாதிபதி உரையாற்றும் போது “கள்ளத்தோணி” என்ற வார்த்தையை பயன்படுத்தியது சிறுபான்மை மக்களை இழிவுப்படுத்தும் செயற்பாடு என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற வருடாந்த எசல பெரஹெராவின் நிறைவு நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை கூறியுள்ளார்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி, அனைத்து மக்களின் பாதுகாவலர் என அழைக்கப்படும் நிலையில், அதியுயர் பதவியில் இருந்து கொண்டு பேசும் போது வார்த்தை பிரயோகங்களில் மிக அவதானம் தேவை என ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த பிக்குவின் வார்த்தை
ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய உரை பின்வருமாறு “ நாங்கள் சர்வதேசத்தில் நாட்டின் எதிர்காலத்தை நிலை நிறுத்துவதில் தேல்வியடைந்துள்ளோம்.அத்தோடு தேசிய உரிமைகளை பாதுகாப்பதிலும் தேல்வியடைந்துள்ளோம்.
ஒரு பௌத்த மதகுரு சொன்ன வார்த்தையானது அது தவறானதாகவும் இருக்கலாம், 'கள்ளத்தோணி' போல் எதிர்காலமும் வரலாறும் இல்லாதவர் போல் எமது நாட்டினர் வளர்ந்துள்ளனர்.
எமது நாட்டின் வரலாற்றை அழிக்க முடியாது.சிலர் கூறுகிறார்கள்,நாம் வரலாற்றை ஆழிக்க திட்டம் தீட்டுவதாக அவ்வாறு செய்ய முடியாது...” என்று அவரின் உரை தொடர்ந்தது.
பேரினவாதம்
இந்த நிலையில், “கள்ளத்தோணி” வார்த்தை சிங்கள மொழியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களை திட்டுவதற்கும், இலங்கை ஒரு தீவு என்கிற ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்ப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் ‘கள்ளத்தோணி’ என்கிற கருத்தாக்கம் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பேரினவாதத்தின் பிரபலமான சொல்லாடலாக ஜனரஞ்சகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதிகமாக இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எதிராகவே இந்த சொல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமன்றி இலங்கைவாழ் தமிழர்கள் அனைவருமே கள்ளத்தோணிகள் என்கிற நம்பிக்கை இன்றும் பல சிங்களவர்களிடையே இருந்து வருகிறது.
மேலும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் கூட ‘மரக்கலயா’ என்று அழைக்கப்படுவதன் நேரடி அர்த்தம் ‘மரக் களங்களில் வந்த அந்நியரே’ என்பது தான்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
