பலாலி உள்ளிட்ட விமான நிலைய அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு
பலாலி உள்ளிட்ட உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் முன்மொழியப் பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்படி, பலாலி, இரத்மலானை, சீகிரியா, அம்பாறை போன்ற உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
மேலும் சீகிரியாவை மையமாகக் கொண்ட சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக சீகிரியா உள்நாட்டு விமான நிலையத்தின் பயணிகள் முனையம் உள்ளடங்களாக வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு, சீகிரியா போன்ற பிரதேசங்களிலும் பழைய ஓடுதளங்கள் சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. இவையனைத்தும் அடுத்த வரும் சரி செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இரத்மலான சர்வதேச விமான நிலையத்தை விமானிகள் பயிற்சி, உள்நாட்டு விமானச் சேவை, வணிக ரீதியான விமானச் சேவை மற்றும் பிராந்திய விமானச் சேவை ஆகியவற்றிற்காக மேம்படுத்தப்போவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தற்போதுள்ள ஓடுபாதையைச் சீரமைத்து, அதன் நீளத்தை 1,400 மீட்டரிலிருந்து 1,771 மீட்டராக நீட்டிக்கும் 6,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டம், ஏ.ஏ.எஸ்.எல் (AASL) நிறுவனத்தின் நிதியுதவியுடன் 2027-ஆம் ஆண்டில் தொடங்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |