மொட்டுக் கட்சியில் புறக்கணிக்கப்படும் நாமல்
இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்களின் பின்னரே அதிபர் தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டே போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் பொருத்தமான அதிபர் வேட்பாளர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தலின் அவசியம்
முதலில் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்பதும், அதேநேரம் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற வேண்டும் என்பதுமே தமது நிலைப்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் எவராலும் ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியாது என்றும் அது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அராஜகத்தை போன்று நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தும் என்பதால் முதலில் அதிபர் தேர்தலின் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்திறுத்தியுள்ளார்.
நாட்டின் நலன்
தொடர்ந்தும் அவர் கூறுகையில், நாட்டின் நலனுக்காக முடிவுகளை எடுக்க வேண்டும். சிறிலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்காக உழைக்க வேண்டும், அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்க வேண்டும்.
அத்துடன், வேறு எவரேனும் வெற்றி பெற்றால் அவர் அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்க வேண்டும், இதன்போதே நாடு அராஜக நிலைக்கு செல்லாது” என பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |