சிறிலங்கா சுதந்திரக் கட்சியை யாரும் உரிமை கோர முடியாது! வலியுறுத்தும் எம்.பி
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு அந்நியர்கள் அல்லது புதியவர்கள் யாரும் உரிமை கோர வேண்டாம் என அக்கட்சியின் பதில் செயலாளர் துமிந்த திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற தடை உத்தரவு
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”சுதந்திரக் கட்சிக்கு நிமல் சிறிபால டி சில்வா தற்போதைக்கு பதில் தலைவராக சட்டரீதியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதனை எதிர்த்தவர்கள், அல்லது தலைமைத்துவ மோசடி செய்ய முயன்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் சுதந்திரக் கட்சி தொடர்பில் எந்தவித உத்தியோகபூர்வ தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது.
உரிமை கோர வேண்டாம்
நிமல் சிறிபால டி சில்வாவே இனிவரும் காலங்களில் சுதந்திரக் கட்சியின் சட்டரீதியான தலைவராக செயற்படுவார். அதில் மாற்றங்கள் இருக்காது.
எனவே கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவது தொடர்பில் அந்நியா்கள் அல்லது புதியவர்கள் முயற்சிகளை மேற்கொள்ளவோ, உரிமை கோரவோ வேண்டாம்” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |