உடனடி அதிபர் தேர்தல் - மூடிய அறைக்குள் திடீர் பேச்சு

SLPP Basil Rajapaksa Ranil Wickremesinghe UNP Vajira Abeywardena
By Vanan Dec 25, 2022 02:54 PM GMT
Report

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அப்படியே ஒத்தி வைத்துவிட்டு உடனடியாக அதிபர் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது குறித்து மந்திராலோசனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகிய மூவரும் ஒன்றிணைந்தே இது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மூடிய அறைக்குள் பேச்சு

உடனடி அதிபர் தேர்தல் - மூடிய அறைக்குள் திடீர் பேச்சு | Presidential Election Secret Meeting Ranil Basil

இந்தச் சந்திப்பில் வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை எனவும், மூடிய அறைக்குள்ளேயே ஆலோசனை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து வெளிவந்த செய்திக்குறிப்பில், “இந்த ஆலோசனையை முதலில் சமர்ப்பித்தவர் வஜிர அபேவர்தன.

அப்படி உடனடியாக அதிபர் தேர்தலை நடத்தினால் அதை எவ்வாறு வெற்றி கொள்வது என்ற வழிகள் சிலவற்றையும் அவர் பசில் ராஜபக்சவிடம் விளக்கிக் கூறியுள்ளார்.

4 வருடங்கள் நிறைவில் அதிபர் விரும்பினால் அதிபர் தேர்தலை நடத்தலாம். அவசரம் ஏற்பட்டால் அடுத்த வருடம் நடுப் பகுதியில் தேர்தலை நடத்தலாம்.

இதை வைத்துக்கொண்டு வேறு எந்தத் தேர்தலையும் நடத்தாது அடுத்த வருடம் நடுப்பகுதியில் அதிபர் தேர்தலை நடத்துவோம் என்று வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.

ரணிலுக்கு இலகு வெற்றி

உடனடி அதிபர் தேர்தல் - மூடிய அறைக்குள் திடீர் பேச்சு | Presidential Election Secret Meeting Ranil Basil

அவ்வாறு நடத்தினால் வடக்கு - கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளும் மலையகத் தமிழர்களின் வாக்குகளும் ரணிலுக்கு கிடைக்கும் என்று வஜிர சுட்டி காட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், தமிழர்கள் நிச்சயம் ரணிலுக்கே வாக்களிப்பர் என்றும் முஸ்லிம்களும் அவ்வாறு செய்வார்கள் என்றும் வஜிர குறிப்பிட்டுள்ளார்.

மொட்டுக் கட்சியின் கைகளில் இருக்கும் சிங்கள வாக்குகளை பெற்றுத் தருவதற்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் எந்தவித சிக்கலும் இன்றி இலகுவாக ரணிலால் வெல்ல முடியும் என்று வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்” - என்றுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்