தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளாத புதிய அதிபர் வேட்பாளர்கள் - புறக்கணிக்கப்படும் தேர்தல்!
                                    
                    Parliament of Sri Lanka
                
                                                
                    Tamil National People's Front
                
                                                
                    Gajendrakumar Ponnambalam
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    President of Sri lanka
                
                        
        
            
                
                By Kalaimathy
            
            
                
                
            
        
    சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவுக்கான வேட்பாளர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்தவொரு விதத்திலும் ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள புதிய அதிபர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை மக்களால் எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை குறித்த அதிபர் தெரிவுக்கான வேட்பாளர்களால் பூர்த்திசெய்யமுடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        