அதிபர் தேர்தலில் விஜயதாச ராஜபக்ச: கோரிக்கை விடுக்கும் அரசியல் தரப்பு
எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முக்கியமான தேர்தல்
இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கவிருப்பதாகவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் எந்த அரசியல் கட்சி மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அடுத்த தேர்தல் மிகவும் வித்தியாசமான தேர்தலாகவும், தீர்க்கமான தேர்தலாகவும் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |