லண்டன் பௌத்த விகாரையில் ரணில் வழிபாடு
London
Ranil Wickremesinghe
By Vanan
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று (07) லண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து பௌத்த விகாராதிபதி இங்கிலாந்தின் பிரதான சங்கநாயக்கர் பேராசிரியர் வண.போகொட சீலவிமல நாயக்க தேரரிடம் ஆசி பெற்றுக்கொண்ட அதிபர் அவருடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார்.
சுமூகமாக கலந்துரையாடல்
பின்னர் வண.போகொட சீலவிமல நாயக்க தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசிகளை வழங்கினர்.
இதன்போது லண்டன் பௌத்த விகாரைக்கு வருகை தந்திருந்த இலங்கையர்களுடன் அதிபர் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி