உக்ரைன் - மேற்குலகின் ஆபத்தான நகர்வு..! உற்றுநோக்கப்படும் போர்த் தாங்கி விநியோகம்
ஜேர்மனியின் நவீன போர்த் தாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பும் விடயத்தில் அதன் ஆட்சித்தலைவர் ஓலாப் ஸ்கோல்ஸ், அமெரிக்காவிடம் இருந்து கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார்.
உக்ரைனுக்கு புதிய போர்த் தாங்கிகளை வழங்கும் விடயம் தற்போது புதிய அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
மேற்குலகின் ஆபத்தான நகர்வு
மேற்குலகின் இந்த நகர்வு மிகவும் ஆபத்தான நிலைமையொன்றை உக்ரைனில் உருவாக்கும் என ரஷ்யா எச்சரித்திருந்தாலும், இன்று ஜேர்மனியிலுள்ள அமெரிக்க படைத்தளத்தில் ரஷ்ய எச்சரிக்கைகளை புறந்தள்ளும் வகையில் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும், ஜேர்மனியிடம் உள்ள லெப்பாட் - 2 நவீன போர்த் தாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் விடயத்தில் ஜேர்மனி கொண்டுள்ள இறுக்கம் அமெரிக்கா உட்பட ஏனைய பங்காளிகளை கவலைடைய வைத்துள்ளது.
அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு புதிய உதவிகளை நேற்று அறிவித்துள்ள நிலையில், இன்று இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்று வந்தாலும் ஜேர்மனியின் போர்த் தாங்கிகளின் விநியோகம் தான் உற்றுநோக்கப்படுகிறது.
லெப்பாட்-2 நவீன போர்த் தாங்கி
ஜேர்மனியை பொறுத்தவரை தனது தயாரிப்பான லெப்பாட் - 2 நவீன போர்த் தாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கினால் அமெரிக்காவும் அவ்வாறு தாங்கிகளை வழங்கவேண்டும் எனக்கூறுகிறது.
அமெரிக்காவோ தனது ஆப்ராம்ஸ் போர்த் தாங்கிகள் வான்கலங்களுக்குரிய எரிபொருளில் இயங்குவதால், அவற்றைவிட டீசல் எரிபொருளில் இயங்கும் ஐரோப்பிய தயாரிப்புக்களே (பிரித்தானியாவின் சலஞ்சர் மற்றும் ஜேர்மனியின் லெப்பாட்-2 போர்த்தாங்கிகளே) உக்ரைனுக்கு சிறந்தது என வாதிடுகிறது.
ஆனால், ஜேர்மனி அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை.
எனினும் பிரித்தானியா தனது போர்த் தாங்கிகளை அனுப்ப உடன்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்