கடும்போக்கு ஆட்சியை முன்னெடுக்குமாறு கோட்டாபயவுக்கு அழுத்தம்
“உங்களிடம் ஒளிந்திருக்கும் கடுமையான பாத்திரத்தை வெளிக்கொணர்ந்து அதன் அடிப்படையில் ஆட்சி நடத்துங்கள்” என தாம் அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்ததாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி (Thisakutti Arachchi) தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறிய அவர், மக்களின் விருப்பமும் அதுவே எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“சர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் போன்றவர்களைப் பின்பற்றி அரச தலைவர் ஆட்சி செய்ய வேண்டும்.
அரச தலைவர் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட போது மக்கள் ஹிட்லர் போன்றதொரு, புட்டின் போன்றதொரு ஆட்சியாளரையே விரும்பினர்.
வெள்ளைவான், முதலைகள் பற்றிக் கூறினாலும் மக்களில் பெரும்பான்மையனவர்கள் அரச தலைவரின் கடுமையான போக்கினை விரும்பினார்கள்.
எனினும் சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கும் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் நேர்மையான ஆட்சியை அரச தலைவர் முன்னெடுக்க முயற்சிக்கின்றார்” என்றார்.
