தொலைபேசி, தொலைக்காட்சி சேவை கட்டணங்களும் அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Dollars
By Vanan
சேவைக்கான கட்டண திருத்தம்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) அனைத்து தொலைபேசி, நிலையான மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவை வழங்குநர்கள் முன்வைத்த கட்டண திருத்தத்தை அனுமதித்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தொலைபேசி, ப்ரோட்பாண்ட்( Router) மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணங்கள் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு
அதே நேரத்தில் அனைத்து கட்டண தொலைக்காட்சி சேவை கட்டணங்களும் 25 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, டயலொக் நிறுவனம் தமது சேவைக்கான கட்டண விபரங்களை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.


