3000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன் குறைவடைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் இன்று (26) தங்க விலை 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை
அதன்படி , நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 3000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல்,நேற்று 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 2700 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 348,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,587 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 21 மணி நேரம் முன்