வாஷிங்டன் பரப்புவது அத்தனையும் போலிச் செய்திகள்: ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு
டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே எவ்வித அமைதிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான மொஹ்சென் ரெசாயி (Mohsen Rezaei) இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அமெரிக்கா பரப்பி வரும் அனைத்துத் தகவல்களும் கற்பனையானவை மற்றும் போலியானவை என ரெசாயி கடுமையாகச் சாடியுள்ளார்.
அமெரிக்கப் பொருளாதார அழுத்தங்களைக் குறைக்கவும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவுமே வாஷிங்டன் இத்தகைய தகவல்களைப் பரப்பி வருகிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஈரான் முன்வைத்துள்ள ஏழு முக்கிய நிபந்தனைகளை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்படும் வரை சர்வதேசக் கடல்சார் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறக்கப்படாது என்றும அங்குள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு சூதாட்டத்தில் தோற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அமெரிக்கா, மேலும் தடுமாறாமல் தனது தவறுகளை உணர்ந்து ஈரானின் 7 நிபந்தனைகளுக்குப் பணிந்து போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கத்தார் பிரதமருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு போர் நிறுத்தத்துக்கான ஆக்கப்பூர்வமான அறிகுறிகள் தென்படுவதாக வாஷிங்டன் கூறி வந்த போதிலும் ஈரானின் உச்ச பாதுகாப்பு கவுன்சில் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் தங்களின் 7 நிபந்தனைகள் ஏற்கப்படும் வரை எந்தவொரு சமரசத்திற்கும் இடமில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |