5 கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Batticaloa Pillayan Sri Lanka Magistrate Court
By Sindu Nov 10, 2026 07:13 AM GMT
Report

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட 3 பேரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு காவல் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக்கொலை, மற்றும் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய  மூன்று சம்பவங்களுக்காக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இக் கொலைகள் தொடர்பில் பிள்ளையான் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் துறையினர் (CID) கைது செய்தனர்.

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிரான பேஸ்லைன் விபத்து வழக்கு விசாரணை: ஜனவரி 05ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிரான பேஸ்லைன் விபத்து வழக்கு விசாரணை: ஜனவரி 05ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தொடர் விளக்கமறியல்

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜூன் 17ஆம் திகதி CIDயினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

5 கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு | Pillayaan Further Remanded

அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று (10) திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோர் நேரில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, பிள்ளையான் காணொளி மூலமாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், லண்டனில் தலைமறைவாக உள்ள சந்தேகநபரான 'பொலிஸ் பாயிஸ்' என்றழைக்கப்படும் மொஹமட் பாய்ஸுக்கு எதிரான திறந்த பிடியாணையை தொடர்ந்து நீடித்து உத்தரவிட்டார்.  

ஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம்

ஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம்

சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்

சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023