அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு: பரவும் செய்திகளை முற்றிலும் மறுத்த ஈரான்
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி (Mohsen Rezaei) மற்றும் அமெரிக்கத் துணை ஜனாதிகதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) ஆகியோருக்கு இடையே சந்திப்பு நடைபெற உள்ளதாக வெளியான செய்திகளை ஈரான் மறுத்துள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இத்தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை எனக் குறிப்பிட்ட அவர், இரு தலைவர்களுக்கும் இடையே இத்தகைய சந்திப்பை நடத்துவதற்கான எந்தவொரு திட்டமும் ஈரானிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள்
எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
கற்பனையான பேச்சுவார்த்தைகள் பற்றிய போலிச் செய்திகளை பரப்புவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

போரை இராணுவ நடவடிக்கை மூலமாகவோ அல்லது புதிய தடைகள் மூலமாகவோ முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்றும் அமெரிக்கா தாங்கள் முன்வைத்துள்ள ஏழு முக்கிய நிபந்தனைகளை (Seven Conditions) ஏற்கும் வரை நேரடிப் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றும் அராக்சி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போரில் தனது இலக்குகள் எதையும் அடைய முடியவில்லை என்பதை ஏற்கெனவே உணர்ந்திருக்க வேண்டும் என்றும் வாஷிங்டன் ஒரு விரக்தியடைந்த சூதாட்டக்காரனைப் போலச் செயல்படுகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
ட்ரம்ப், ஈரான் மீதான போர் இராணுவ ரீதியாக நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டது என அறிவித்த போதிலும் உயர்நிலை இராஜதந்திரச் சந்திப்புகள் குறித்த வதந்திகளை ஈரான் மறுத்துவருவதுடன் தங்களின் நிபந்தனைகள் ஏற்கப்படும் வரை அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என்பதில் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |