ரணிலின் வலையில் சிக்கிய பிரதமர்..! உடைகிறதா மொட்டுக் கட்சி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைத்து பலமான கூட்டணி ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
கூட்டணி அடிப்படையில் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் என அரசாங்கத்தில் ஒரு தரப்பினரும், கட்சி என்ற ரீதியில் தனித்து போட்டியிடுவோம் என பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்,செயற்பாட்டு ரீதியான அரசியல் நிலைவரம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தலைமையில் கடந்த வாரம் நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
