பிரதமரின் பதவி விலகல் - பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை!
Dinesh Gunawardena
Prime minister
Government Of Sri Lanka
Sri Lankan political crisis
By Pakirathan
பிரதமரின் பதவி விலகல் குறித்து வெளியாகும் செய்தி தொடர்பில் பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.
அந்தவகையில், பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்திகள் அனைத்தும் போலியானவை எனத் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே வெளியிட்டுள்ளார்.
பிரதம அலுவலக அறிக்கை
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு தமக்கு எந்தவித தரப்பாலும் கோரிக்கை விடப்படவில்லை என்றும், பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை எனவும் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயல்பாடுகளை குழப்புவதற்கான சதியே இது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி