25 தலிபான்களை கொன்று குவித்த இளவரசர் ஹாரி
பிரித்தானிய அரச படையில் இணைந்து ஆப்கானில் பணியாற்றியவேளை 25 தலிபான் பயங்கரவாதிகளை கொன்றதாக இளவரசர் ஹாரி(Prince Harry) தெரிவித்துள்ளமை ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களை சினம் கொள்ள வைத்துள்ளது.
இளவரசர் ஹாரி(Prince Harry) தனது தி ஸ்பே என்ற சுயசரிதை புத்தகத்தில் இவ்வாறு தலிபான்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார் என வெளிநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.
கடும் சினத்தில் தலிபான்கள்
இளவரசர் ஹாரியின் (Prince Harry) இந்த கருத்துக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இளவரசர் ஹாரியால்(Prince Harry) கொல்லப்பட்டது தலிபான்கள் அல்ல, ஆப்கானிஸ்தான் குடிமக்களே என்று கூறியுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது போர்க்குற்றம் என்றும் தலிபான் அரசு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
