தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி..! ஹரி எழுதிய நூலால் கிளம்பிய சர்ச்சை
பிரித்தானிய இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி பற்றி கசிந்த தகவலால் பல சர்ச்சைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பிரித்தானிய இளவரசர் ஹரி எழுதியுள்ள Spare எனும் புத்தகம் வரும் செவ்வாய்க்கிழமை வெளியாகிறது.
ஆனால், அது தவறுதலாக ஸ்பெயினில் ஏற்கனவே வெளியாகிவிட்டதைத் தொடர்ந்து, அதிலுள்ள பல தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இருவரின் பிரிவு
அந்த புத்தகத்தில் ஹரி தனது முன்னாள் காதலி குறித்த பரபரப்பு தகவல் ஒன்றை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.
தனது நீண்ட நாள் காதலியான Chelsy Davy யைப் பிரிந்த பின், ஹரி Caroline Flack என்ற பெண்ணை பார்ட்டி ஒன்றில் சந்தித்துள்ளார்.
Caroline Flack பிரித்தானியர்களின் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத வகையில் கலந்துவிட்ட புகழ்பெற்ற Love Island என்னும் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாவார்.
ஆனால், ஹரிக்கு அவரைத் தெரியவில்லையாம். ஆனாலும் அது குறித்து வருந்தாத Caroline Flack, ஹரியுடன் இனிமையாக பழகியுள்ளார்.
ஆனால், இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், Caroline உடைய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் பின் தொடர்ந்தனர்.
தற்கொலை
இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக Caroline உடைய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து பிரிவதென முடிவு செய்து இருவரும் பிரியாவிடை அளித்துப் பிரிந்தனராம்.
பின்னர் Lewis Burton என்ற நபரை காதலித்த Caroline, அவரைத் தாக்கியதாக வழக்குத் தொடரப்பட்டது.
தான் தன் காதலரைத் தாக்கவில்லை என்று அவர் கூறியும் அவர் Love Island நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Caroline அதன் பிறகு லண்டனிலுள்ள தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
