ஜப்பான் இளவரசியையும் விட்டுவைக்காத கொரோனா
covid
hospital
japan
princess
By Sumithiran
ஜப்பான் இளவரசி யாகோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த யாகோவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு நோய் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதால் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜப்பான் அரச குடும்பத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான முதல் நபர் இளவரசி யாகோ என்பது குறிப்பிடத்தக்கது.
