20 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருடன் சிக்கிய பாடசாலை அதிபர்!
எப்பாவல பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் மற்றும் அவரது மகன், ஒரு ஹோட்டலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயின் கையிருப்புடன் கைது செய்துள்ளனர்.
எப்பாவல - தெடகல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 54 மற்றும் 22 வயதுடைய எப்பாவல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
விரிவான விசாரணை
கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி பேலியகொட உள்ளூராட்சிப் பகுதியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய தேசிய திட்டத்தின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்கள் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |