மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூண்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் விபரீத முடிவால் பரபரப்பு

Batticaloa Jaffna Sri Lanka Magistrate Court
By Bavan Jul 20, 2026 04:00 PM GMT
Report

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கைதிகள் கூண்டுக்குள் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற நிலையில் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

கைதியின் இந்த சம்பவம் நீதிமன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது

யாழ்ப்பாணத்தில் கைது

3 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூண்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் விபரீத முடிவால் பரபரப்பு | Prisoner Attempts Suicide In Batti Court Jail

இந்த நிலையில் பிணையில் வெளிவந்தவர் வழக்கிற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாகி வந்துள்ளதையடுத்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததையடுத்து கடந்த 13 ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 15 ம்திகதி முற்படுத்தியதையடுத்து அவரை இன்றையதினம் (20ம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இன்று திங்கட்கிழமை (20) காலையில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக் கைதிகள் கூட்டில் அடைக்கப்பட்டார்

செம்மணியில் இன்று சிசு உட்பட சிறுவர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணியில் இன்று சிசு உட்பட சிறுவர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

விபரீத முடிவால் வைத்தியசாலையில் அனுமதி

இதனை தொடர்ந்து குறித்த நபரை திறந்த நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 3ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அவரை நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்தனர்

மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூண்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் விபரீத முடிவால் பரபரப்பு | Prisoner Attempts Suicide In Batti Court Jail

இந்த நிலையில் தொடர்ந்து திறந்த நீதிமன்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் 3.00 மணியளவில் நீதிமன்ற சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்குள் வைத்து குறித்த கைதி விபரீத முடிவெடுத்த நிலையில் படுகாயமடைந்து உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த நபர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவருக்கு எதிராக மட்டக்களப்பில் திருட்டுக்கள் தொடர்பாக 3 வழக்குகள் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர் 

குட்டிமணி - தங்கத்துரைக்கான உருவச்சிலை திறப்பு விவகாரம்! விசாரணையை ஆரம்பித்த காவல்துறை

குட்டிமணி - தங்கத்துரைக்கான உருவச்சிலை திறப்பு விவகாரம்! விசாரணையை ஆரம்பித்த காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026