ரணிலுக்கு ஆதரவாக நடைபெற்றவிருந்த கவனயீர்ப்பு நடவடிக்கை: தடுத்து நிறுத்திய காவல்துறையினர்
ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவாக நடைபெற்றவிருந்த கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றை தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக முல்லைத்தீவில் (Mullaitivu) நேற்றைய தினம் (06) மாலை 06.30 மணிக்கு இருளிலிருந்து நாட்டை ஒளியேற்றிய தலைவர் எனும் தொனிப் பொருளில் தீப்பந்தம் தாங்கி ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவிருந்தது.
இந்த நடவடிக்கைக்காக ரணில் விக்ரமசிங்கவின் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் பரப்புரை அலுவலகத்திற்கு முன்னாள் சுமார் 25 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
கவனயீர்ப்பு நடவடிக்கை
இந்நிலையில், முல்லைத்தீவு தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வருகைதந்து கவனயீர்ப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது தேர்தல் விதிமுறைக்கு மீறிய செயலெனவும் அவ்வாறு கவனயீர்ப்பு மேற்கொள்ளப்படுமாயின் கைது செய்யப்படுவீர்கள் எனவும் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து கவனயீர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
தடுத்து நிறுத்தப்பட்ட கவனயீர்ப்பை தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் பரப்புரை அலுவலகத்துக்கு முன்னாள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |