இலங்கையில் நித்திரையின்றி தவிக்கும் குழந்தைகள் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில்(sri lanka) குழந்தைகள் இடையே தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுகாதார நிபுணர் டொக்டர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிள்ளைகளுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்குத் தேவையான விடயங்களைச் செய்வது பெற்றோரின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தூக்கமின்மை பிரச்சினைகள்
"இலங்கை சிறுவர்கள் மத்தியில் தூக்கம் குறித்து அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, 25% குழந்தைகளுக்கு ஒரு வருட வயதிற்குள் தூக்கமின்மை பிரச்சினைகள் உள்ளன.
மேலும், இளமைப் பருவத்திலும் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களிலும் தூக்கமின்மையின் விளைவுகள் உள்ளன.
இலங்கையில் கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தரவுகள் கூட மக்களின் தூக்கத்தில் சில பிரச்சனைகள் இருப்பதைக் காட்டுகிறது.
வயதுக்கேற்ற தூக்கம்
இதேவேளை, ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உறங்க வேண்டும் என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக டொக்டர் இனோகா விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.
இதன்படி "பிறந்த மூன்று மாதங்களில், பிள்ளைகள் சுமார் 14-17 மணி நேரம் தூங்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகள் உள்ளன. 4 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, 12 முதல் 16 மணி நேரம், ஒரு வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை, 11 முதல் 14 மணி நேரம், 3 வருடங்கள் முதல் 5 வயது வரை 10 முதல் 13 மணி நேரம் வரை 5 வயதுக்குட்பட்ட 50% குழந்தைகள் தங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக குறைந்தபட்சம் 7 மணிநேரம் தூங்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |