ஈரான் இராணுவத் தளபதி விடுத்துள்ள சூளுரை!
ஈரானின் தரை, வான் மற்றும் கடல் எல்லைகளின் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைத் தொடர்ந்து பாதுகாப்போம் என்று அந்நாட்டின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி (Amir Hatami) உறுதியளித்துள்ளார்.
ஆயுதப் படைகளின் ஏனைய பிரிவுகளுடன் இணைந்து, இராணுவத் திறன்களை மேம்படுத்தும் அதேவேளையில் எதிரிகளைத் தீர்க்கமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானியப் படைகள் தியாக உணர்வுடனும் 'ஜிஹாத்' சிந்தனையுடனும் உந்தப்பட்டு, தமது கடமையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எந்நேரமும் போருக்குத் தயார்
மேலும், "எங்கள் படைகள் எதிரிகளை கடைசி மூச்சு வரை எதிர்கொள்ளும்; எந்நேரமும் போருக்குத் தயாராக விரல்களை துப்பாக்கியின் விசையில் வைத்திருப்பார்கள்" என்றும் ஹடாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் தேசிய இராணுவ தினத்தை (ஏப்ரல் 18) முன்னிட்டு அவர் விடுத்துள்ள இந்தச் செய்தி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பிராந்தியப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |