வெசாக் தினத்தில் தையிட்டி விகாரைக்கு எதிராக வெடித்த போராட்டம்
யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமை.
அந்த வகையில் நேற்று (29.05.2026) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் வெசாக் தினமான இன்று (30) இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
3 வருடங்கள் கடந்துள்ளது
இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பேராட்டம் இடம்பெறும் குறித்த பிரதேசத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் இம்மாதத்துடன் முப்பத்தாறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் மக்கள் தமது அறவழிப் போராட்டத்தை இடையறாது தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |