ரணிலின் உருவப்பொம்மையுடன் கொழும்பில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
Colombo
Ranil Wickremesinghe
SL Protest
By Vanan
கொழும்பில் ஆர்ப்பாட்டம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது. காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
உருவப்பொம்மை
இதன்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உருவப்பொம்மையொன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொம்மைக்கு பணம் வழங்கப்படுவது போன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பாவனை செய்திருந்தனர்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
3ம் ஆண்டு நினைவஞ்சலி