வெளிநாடொன்றில் அரசிற்கு எதிராக வெடித்த gen z போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் காயம்
மெக்சிக்கோவில் ஜனாதிபதி கிளாடியா ஷிஃபர் (Claudia Sheinbaum) அரசாங்கத்திற்கு எதிராக ஜென்ஸீ இளைஞர்கள் நடத்திய பாரிய போராட்டத்தின் விளைவாக பல நகரங்களுக்கு வன்முறை பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது தலைநகர் மெக்சிக்கோ மட்டும் 120 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 100 பேர் காவல்துறை அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக ஜென்ஸீ அமைப்பைச் சேர்ந்த 17,000க்கும் மேற்பட்ட இளம் போராட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை (15) தலைநகரில் கூடினர்.
போராட்டத்திற்கான காரணம்
மேலும் இந்த போராட்டத்திற்கு அரசாங்கத்திற்கு எதிரான வலதுசாரி அரசியல்வாதிகளால் நிதியளிக்கப்படுவதாக ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஜென்ஸீ இளைஞர்கள் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் மெக்சிகோ போராட்டத்திற்கு, நாட்டில் பொதுமக்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்ட்டுள்ளது.
மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு நகர முதல்வர் கார்லோஸ் மான்சோ படுகொலை செய்யப்பட்டதும் இந்தப் போராட்டத்திற்கு ஒரு காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையின் நடவடிக்கை
இந்தநிலையில் மெக்சிகோ நகரில் ஜனாதிபதி மாளிகையைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகளை போராட்டக்காரர்கள் உடைத்துள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையை பாதுகாக்க காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.

அத்துடன் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வன்முறை பரவல் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெக்சிகோ நகர பாதுகாப்புத் தலைவர் பாப்லோ வாஸ்குவேஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்