இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்!
britain
people protest
srilankan economic crisis
By Kanna
பிரித்தானியாவின் ஹென்லி பிரதேசத்தில் வசிக்கும் இலங்கையர்கள், இன்றைய தினம் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையின் அரச தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்களை உடனடியாக இராஜினாமா செய்து, நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கை அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு எதிராக உள்ள நாட்டிலும் வெளிநாடுகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதேவேளை, நேற்று அவுஸ்திரேலியா - மெல்போர்ன் நகரிலும், ஜப்பான் - டோக்கியோ நகரிலும் கடந்த வாரம் ஸ்கொட்லாந்தின் பேர்த் மற்றும் டண்டி மற்றும் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிலும் இலங்கையர்கள் தங்கள் தாயகத்தைப் பாதுகாக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்