தமிழின அழிப்பிற்கு நீதிகோரி ஐ.நா முன்றலில் போராட்டம் ( படங்கள்)
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மையப்படுத்திய விவாதம் முடிவடைந்த பின்னர், இன்று ஜெனிவா நேரப்படி பிற்பல் இரண்டு மணி முதல் மாலை வரை மனித உரிமை பேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ்மக்களின் நீதிகோரும் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற முதன்மை கோரிக்கையுடன் இந்தப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
அதன் பின்னர் அங்கு பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அதில் தமிழருக்கு மறுக்கப்படும் நீதியை மையப்படுத்திய பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டிருந்தது.
இன்றைய போராட்டத்தில் இலங்கையின் தற்போதைய அரச தலைவர் ஒரு இனப்படுகொலை குற்றவாளி எனவும் இலங்கை அரசாங்கத்தை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தவேண்டும் என்பது போன்ற கொட்டொலிகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பன்மொழிப் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதேவேளை ஜெனிவாவில் போராட்டம் இடம்பெறமுன்னர் பிரித்தானியாவில் இருந்து பயணித்த மனிதநேய மிதிவண்டிப் பயண செயற்பாட்டாளர்கள் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் முன்றலில் இன்று காலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுத்திருந்தனர்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த தமிழினப் படுகொலைக்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் ஆணையாளரின் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 2 மணி நேரம் முன்
