செம்மணி மனிபுதைகுழி விவகாரத்தில் அரசின் சதி - அம்பலப்படுத்தும் அர்ச்சுனா எம்.பி

United Nations Jaffna Sri Lanka Politician Ramanathan Archchuna
By Thulsi Jun 23, 2025 11:37 AM GMT
Report

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இன்று இலங்கை வரவுள்ள நிலையில், அவரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்ய சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிபுதைகுழிக்கு நீதி வேண்டி “அணையா தீபம்” ஏற்றப்பட்டு போராட்டம் ஒன்று இன்று (23.06.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அர்ச்சுனா எம்.பி, “இப்போராட்டமானது அரசியலையும் தாண்டி எங்கள் உறவுகளுக்காக நடக்கின்ற போராட்டம்.

ஆடைகளின்றி மண்ணுக்குள் புதைக்கப்பட்ட தமிழர்கள்... நீதி கோரும் அணையா விளக்கு போராட்டம்

ஆடைகளின்றி மண்ணுக்குள் புதைக்கப்பட்ட தமிழர்கள்... நீதி கோரும் அணையா விளக்கு போராட்டம்

மனித உரிமைகள் ஆணையாளர் 

ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.


முன்னதாக 2011ஆம் ஆண்டும், 2016 ஆம் ஆண்டும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை வந்திருந்தனர். இதில் 2016ஆம் ஆண்டு ஆணையாளரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்திருந்தனர்.

அப்போதைய நல்லாட்சி அரசாங்கமும், அதற்கு முட்டுக்கொடுத்தவர்களும் இனப்படுகொலை நடக்கவில்லை என்றே கூறிவிட்டனர். இதன் காரணமாக அவர் அப்போது வடக்கு பகுதிகளுக்கு வந்திருக்கவில்லை.

மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் மீளவும் இன்று இலங்கை வருகின்றார். இம்முறையும் மனித உரிமைகள் ஆணையாளரை வடக்கிற்கு வரவிடாமல் செய்ய உச்சகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எம்.பி குறிப்பிட்டார்.

செம்மணியில் புதைக்கப்பட்ட குடும்பங்கள் - தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்திற்கு ஆதரவு

செம்மணியில் புதைக்கப்பட்ட குடும்பங்கள் - தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்திற்கு ஆதரவு

முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை

ஆனால் புலம்பெயர் தமிழர்கள் கட்டாயம் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்ற ஒரு நிலைமைக்கு கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில், நாளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் மாத்திரம் சந்திக்கும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செம்மணி மனிபுதைகுழி விவகாரத்தில் அரசின் சதி - அம்பலப்படுத்தும் அர்ச்சுனா எம்.பி | Protest In Jaffna Chennai Today

இதில் சிறிதரன் ஐயா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஐயா உள்ளிட்டவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை அவர்கள் மனித உரிமைகள் ஆணையரிடம் கூற உதவிசெய்ய வேண்டும்.

இதனிடையே, நாளைய தினம் என்னை நாடாளுமன்றம் செல்லவிடாமல் தடுக்க உச்சகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

தடுக்கும் முயற்சி

எனினும், நான் கண்டிப்பாக நாடாளுமன்றம் சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வேன்.

செம்மணி மனிபுதைகுழி விவகாரத்தில் அரசின் சதி - அம்பலப்படுத்தும் அர்ச்சுனா எம்.பி | Protest In Jaffna Chennai Today

இதன்போது தமிழர்களுக்கு எதிராக நடந்த அனைத்து இனப்படுகொலை சம்பவங்களும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்பதுடன், அதற்கான முழு ஆவணங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், அதை கொடுக்க கூடாது எனவும் இதனை தடுக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

You may like this


மூடி மறைக்கப்படும் செம்மணி விவகாரம்-வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்: மக்களுக்கான அறிவிப்பு

மூடி மறைக்கப்படும் செம்மணி விவகாரம்-வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்: மக்களுக்கான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026