காட்டு யானைகளை விரட்டுமாறு வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
Vavuniya
Sri Lanka Elephants
Department Of Wildlife
By Aadhithya
காட்டு யானைகளை கிராமத்தை விட்டு விரட்டுமாறு வலியுறுத்தி வவுனியாவில் (Vavuiya) போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது, வவுனியா போகஸ்வெவ வீதியை மறித்து மகாகச்சகொடிய மக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காட்டு யானை
இதன்போது, வவுனியா வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக காட்டு யானைகளின் தாக்குதலினால் ஒரு வாரத்திற்குள் தமது கிராமத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், மேலும் மனித உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவித்தும் வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





