வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ( படங்கள்)
Jaffna
SL Protest
Northern Province of Sri Lanka
Prisons in Sri Lanka
By Vanan
கவனயீர்ப்பு போராட்டம்
வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது.
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்களே குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 அரசியல் கைதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தாது, விசாரணைகளை மேற்கொள்ளாது, தொடர்ச்சியாக தடுத்து வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் கைதிகளின் உணவுத் தவிர்ப்பு
இந்த நிலையில் குறித்த 12 அரசியல் கைதிகளின் உறவினர்களும் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி