புதிய மதுபானசாலைக்கு அனுமதி : எதிர்த்து வலிவடக்கில் போராட்டம்
Jaffna
Protest
By Independent Writer
யாழ் மாவட்டத்தில் 04 புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வலி வடக்கு பிரதேச சபை எல்லைக்குள்ளும் ஒரு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
இந் நிலையில் இதுவரை காலமும் மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் மதுபானசாலை அனுமதி வழங்கப்படுவதை கண்டித்து பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கண்டன எதிர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.
நாளை(07) காலை 9.00 மணிக்கு தெல்லிப்பழைச் சந்தியில் ஆரம்பமாகும். எதிர்ப்பு பேரணி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மகஜர் கையளித்தலுடன் நிறைவடையும்.
எனவே அனைத்து சமூக ஆர்வலர்களும் இப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |