ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த உச்சக்கட்ட போராட்டம்
அமெரிக்காவில் (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு (Donald Trump) எதிராக போராட்டங்கள் பாரிய அளவில் வலுவடைய ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், கலிஃபோா்னியா (California) மற்றும் நியூயாா்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இவ்வாறு போராட்டம் வெடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வீதிகளில் லட்சக்கணக்கானோா் திரண்டு ட்ரம்ப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள், புகைப்படங்களை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உரிய ஆவணங்கள்
பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிப்பவா்களை ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றது.
இந்த வெளியேற்றம் சட்டவிரோதமானது என தெரிவித்து ஜனநாயக கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கடந்த ஆறாம் திகதி முதல் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
அமெரிக்க இராணுவம்
இந்தநிலையில், அமெரிக்க இராணுவத்தின் 250 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற ட்ரம்ப் வாஷிங்டன் சென்றுள்ளார்.
இந்தநிலையில், அவருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கு கூடிய 200 இற்கும் மேற்பட்ட போராட்டக்காரா்கள் “டிரம்ப் உடனே வெளியேற வேண்டும்” என தெரிவித்து பாரிய பேராட்டத்தில் குத்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
