மாகாணசபைத்தேர்தல் - ஆளும் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா(Nimal Siripalade Silva) இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
விரைவில் தேர்தலை நடத்தி ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட சில சரத்துக்களை உள்ளடக்குமாறு கோரியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த சந்திப்பின்போது தேர்தல் செலவினங்களைக் குறைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.