மாகாணசபைத் தேர்தல் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples Election
By Sathangani Aug 29, 2026 07:20 AM GMT
Report

பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வினவியபோதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

யாழ். நகர மத்தியில் சகிக்க முடியாத துர்நாற்றம்! மாநகரசபை தூங்குகின்றதா.... பொதுமக்கள் விசனம்

யாழ். நகர மத்தியில் சகிக்க முடியாத துர்நாற்றம்! மாநகரசபை தூங்குகின்றதா.... பொதுமக்கள் விசனம்

 சட்ட மாஅதிபர் திணைக்களம்

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்த பரிந்துரைகளுக்கு இணையாக யோசனைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

மாகாணசபைத் தேர்தல் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு | Provincial Council Elections Election Commission

முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்குமாறு செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர்

வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர்

 நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம் 

ஏனெனில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்திச் செய்யப்படாத காரணத்தால் எந்தத் தேர்தல் முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் காணப்படுகிறது.

தேர்தல் முறைமை குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானங்களை எம்மால் எடுக்க முடியும்.

மாகாணசபைத் தேர்தல் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு | Provincial Council Elections Election Commission

நாடாளுமன்ற செயற்குழு விரைவான தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம். பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் செயற்குழு முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு அதற்குரிய யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

தற்போது இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அது குறித்தும் யோசனைகளை முன்வைப்போம்“ என தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலைகளில் மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026