மாகாணசபைகளை ஒழியுங்கள் -மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கர்ஜிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் பிற்போட்டால் பிச்சை எடுக்கவேண்டிய நிலையே ஏற்படும் என பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றில் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது பொருத்தமானதல்ல எனத் தெரிவித்த அவர், இந்த நேரத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும்
இல்லையேல், மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என தெரிவித்த உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் வெள்ளை யானைகளை வைத்திருப்பதில் பலனில்லை என்றார்.
ரணிலை அதிபராக நியமித்தது ஏன்
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், காட்டுச் சட்டத்தை அகற்றுவதற்கும், நாட்டின் பொருளாதார நிலைமையை வலுப்படுத்துவதற்கும் பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்களின் வாக்குகளினால் அதிபராக ரணில் நியமிக்கப்பட்டதாகவும் அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
