கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் - முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)
முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்
வடக்கு, கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என வலியுறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைகுள் கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்தியும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஜனநாயக உரிமையாகும் எனக் குறித்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
100 நாள் செயல்முனைவு திட்டத்தின் 20 ஆவது நாள்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் 100 நாள் செயல்முனைவு திட்டத்தின் இன்று 20 ஆவது நாள் முல்லைத்தீவு முள்ளியவளையில் நீராவிப்பிட்டி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்தி
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுகோரி 100 நாட்கள் செயல்முனைவு” - 13 நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று