“தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுகோரி 100 நாட்கள் செயல்முனைவு” - 13 நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று
'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 13 நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை (13) மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அழைப்புக்கு ஏற்ப, இன்று முற்பகல் 11 மணிக்கு புல்லுமலை தேவாலய சந்தியில் பெருமளவான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் நாங்கள் சுதந்திரமாக வாழ உரிமைவேண்டும், நாங்கள் நாட்டை துண்டாட தனி அரசை கேட்கவில்லை, இலங்கை நாட்டிற்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வை கேட்கின்றோம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், காணாமல் போனவர்களுக்கு தீர்வு வேண்டும், பேச்சு சுதந்திரம் வேண்டும், நாங்கள் எங்கள் உரிமையை கேட்கின்றோம் எனும் சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி போரட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தங்கள் கோரிக்கையடங்கிய மகஜரை ஊடகங்கள் ஊடாக வெளிகொண்டுவருமாறு ஊடகவியலாளர்களிடம் கையளித்த பின்னர் போராட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.


இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 2 மணி நேரம் முன்