பற்றி எரியும் ஈரான்...! நிலைமை இன்னும் மோசமாகும் - ட்ரம்பின் நேரடி எச்சரிக்கை
சர்வதேச நீர்வழியில் ஈரான் மேற்கொண்ட அத்துமீறல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தற்போதைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், ஈரான் நேற்று சர்வதேசக் கப்பல்கள் மீது நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே (Retaliation) இந்த சமீபத்திய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்துக் பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்
அத்தோடு இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடருமானால் நிலைமை இன்னும் மோசமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது எச்சரிக்கைப் பதிவோடு மட்டுமன்றி அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல்களின் பின்னரான தற்போதைய நிலவரங்கள் மற்றும் சேத விபரங்களை விளக்கும் வகையிலான பிரத்யேகப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் அவர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அண்மையில் எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக முறிந்துள்ளதை ட்ரம்ப் உலக நாடுகளுக்கு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |