அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Jul 09, 2026 12:12 AM GMT
Report

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டிருந்த தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் மீதான தனது இரண்டாவது கட்டத் தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) ஈரான் மீது இந்த புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas), கடலோர நகரமான சிரிக் (Sirik) மற்றும் ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள புஷெர் (Bushehr) மாகாணம் ஆகிய மூன்று முக்கியப் பகுதிகள் மீது அமெரிக்கப் படைகள் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை மூட முயற்சித்தால்...! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மூட முயற்சித்தால்...! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

அணுமின் நிலையம் 

ஈரானின் அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷெர் பகுதியிலும் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களுக்கு அருகிலும் அடுத்தடுத்து பலத்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் மற்றும் சர்வதேசச் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல் | Us Attack Iran

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களாகிய மாலுமிகள் மீது ஈரான் நியாயமற்ற முறையில் அண்மையில் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீதி அமைச்சர் முன்னிலையில் கதறியழுத சிறைச்சாலை அதிகாரிகள்!

நீதி அமைச்சர் முன்னிலையில் கதறியழுத சிறைச்சாலை அதிகாரிகள்!

நியாயமற்ற ஆக்கிரமிப்பு

குறித்த பதிவில், ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் இராணுவத் திறனை மேலும் முடக்குவதற்காக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகப் படைகள் கூடுதல் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளன.

ஒரு முக்கிய சர்வதேச நீர்வழியில் சுதந்திரமாகப் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களாகிய மாலுமிகளுக்கு எதிரா ஈரான் அண்மையில் மேற்கொண்ட நியாயமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டை அமெரிக்கா பொறுப்பேற்கச் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற ட்ரம்ப், இன்று இரவு அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கப் போகிறோம் என எச்சரித்ததைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல்கள் களத்தில் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வனவிலங்கு பாகங்கள் விற்பனை: சிக்கிய நகைக்கடை உரிமையாளர் - மில்லியன் ரூபா அபராதம்

வனவிலங்கு பாகங்கள் விற்பனை: சிக்கிய நகைக்கடை உரிமையாளர் - மில்லியன் ரூபா அபராதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026