உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்ட திருமதி இலங்கை அழகியின் பட்டம்
canceled
Pushpika
Chandimal Jayasinghe
Sri Lankan beauty
By Sumithiran
2021 ஆம் ஆண்டு திருமதி இலங்கை அழகியாக தேர்வு செய்யப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் பட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க(Chandimal Jayasinghe)இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
திருமதி உலக அழகி போட்டிக்காக, இலங்கை திருமதி அழகியை தெரிவுசெய்வதற்காக தமது அமைப்பு கொண்டுள்ள சட்டரீதியான அதிகாரத்துக்கமைய, இன்று முதல் புஷ்பிகா டி சில்வாவின் திருமதி இலங்கை அழகி பட்டத்தை, உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் எந்தவிதத்திலும் பயன்படுத்த தடை விதிப்பதாக அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்தார்.

