ஆட்சிக்கு வந்து 26 ஆண்டுகள் நிறைவு...! இராணுவத்தினருக்கு புடினின் அதிரடி அறிவிப்பு
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்கள் பூர்வீக நிலத்திற்காகவும் உண்மைக்காகவும் நீதிக்காகவும் போராடும் பொறுப்பை நீங்கள் (பாதுகாப்பு படையினர்) ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.
இந்த புத்தாண்டு இரவில் ரஷ்யா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உங்களுடன் இருப்பதாக நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
ஆறு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு : மூன்று மணிநேரத்திற்கும் அதிகமாக முறைப்பாட்டாளரிடம் வாக்குமூலம்
அர்ப்பணிப்புள்ள அன்பு
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறும், புத்தாண்டில் நமது அனைத்து வீரர்கள் மற்றும் தளபதிகளுக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் உங்களை நம்புகிறேன், ரஷ்யாவின் மீதான உண்மையான தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள அன்பினால் ரஷ்யர்கள் ஒன்றுபட்டுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

போரிஸ் யெல்ட்சின் பதவி விலகிய பின்னர் 1999 இல் புத்தாண்டுக்கு முன்னதாக புடின் ரஷ்ய ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
இந்தநிலையில், இன்றுடன் புடின் ஆட்சிக்கு வந்து 26 ஆவது ஆண்டு நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |