சட்டத்தரணி படுகொலையின் எதிரொலி! நாமலின் வழக்கு ஒத்திவைப்பு
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணியொருவர் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டதற்கு நீதிகோரி இன்று (16) நீதிமன்ற கடமைகளில் இருந்து விலகுவதற்கு சட்டத்தரணிகள் முடிவு செய்துள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவு
எவ்வாறாயினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதியான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையானதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, வழக்கை 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டில் ரக்பியை ஊக்குவிப்பதற்காக என்று கூறி, இந்திய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்றுகொண்டு அதனை தவறாகப் பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |