வெடுக்குநாறி மலையில் தடையின்றி நடந்த சிவராத்திரி வழிபாடுகள்!
Sri Lankan Tamils
Tamils
Vavuniya
By Shalini Balachandran
Courtesy: கபில்
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
இதன்போது நேற்று (15-02-2026) மதியம் இரண்டு மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேட பூசை அனுட்டானங்கள் இடம்பெற்றன.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு காலை முதல் காவல்துறையினர் அந்தப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் வழிபாடுகளுக்கு எந்தவிதத் தடைகளும் விதித்திருக்கவில்லை.
இரவுநேரப் பூசை
அத்தோடு, இரவுநேரப் பூசைகளைச் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மழை பெய்திருந்தமையால் மலைக்குச் செல்லும் காட்டுப்பாதை முழுமையாகச் சேதமடைந்திருந்தது.
இதனால் அடியவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் ஆலயத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 14 மணி நேரம் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி