டொனால்ட் ட்ரம்புக்கு அஞ்சிய புடின்: முற்று பெறப்போகும் ஒன்பது வருடகால போர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) சந்திக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் மற்றும் எரிசக்தி விலை பிரச்சினைகள் குறித்து ட்ரம்ப் தனது புதிய நிர்வாகத்தின் முதல் ஐந்து நாட்களில் எடுத்துரைத்த பிரச்சினைகள் குறித்து அதன்போது பேச வேண்டும் என புடின் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பொருளாதாரத்தில் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதாரத் தடைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி முடிவுகளை எடுப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை
இதேவேளை, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தடுக்கும் 2022 ஆணையை ரத்து செய்யுமாறு உக்ரைன் ஜனாதிபதிக்கு மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுத்திருக்காவிட்டால் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னேடுக்க வாய்ப்பு கிடைத்திருக்காது என்றும் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற ட்ரம்ப், புடினைச் சந்திக்க விரும்புவதாகவும், உக்ரைன் போருக்கு முன்கூட்டியே முடிவு காண விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
உச்சிமாநாடு
அத்தோடு, அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா வரவில்லை என்றால், மீண்டும் கடுமையான பொருளாதரா தடைகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறனதொரு பின்னணியில், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த பதிலானது, உக்ரைனில் நடந்த போர் காரணமாக மேற்கத்திய தலைவர்களுடன் மூன்று ஆண்டுகளாக உயர் மட்ட தொடர்பு இல்லாத நிலையில், ட்ரம்புடன் முன்கூட்டியே உச்சிமாநாட்டை நடத்த ரஷ்யா ஆர்வமாக உள்ளது என்பதற்கான வலுவான அறிகுறி என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |