பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் தரப் பரிசோதனை
நாட்டில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இச்செயற்பாட்டை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் வாகன விபத்துக்களுக்குச் சாரதிகளின் கவனயீனம் மற்றும் வாகனங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளுமே பிரதான காரணம்.
தொழில்நுட்ப அதிகாரிகள்
இது தொடர்பில் கவனம் செலுத்தி பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த தரப் பரிசோதனைக்காகத் தகுதிவாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்காகத் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புகளின் பின்னர் செப்டெம்பர் மாத இறுதிக்குள் இச்செயற்பாட்டை ஆரம்பிக்க முடியும்.
அதற்கமைய இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்