உகண்டாவில் ராஜபக்சக்களின் பணம் : அநுர அரசுக்கு நாமல் விடுத்த கோரிக்கை
விமானங்கள் மூலம் உகண்டாவுக்கு (Uganda) செல்லப்பட்டதாகக் கூறப்படும் ராஜபக்சக்களின் பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் (Anuradhapura) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர். “அமெரிக்காவின் வரிக்கொள்கையை எதிர்கொள்வதற்குரிய திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை. மாறாக ராஜபக்சக்களை விமர்சித்துக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கே முற்படுகின்றனர்.
அமெரிக்காவின் வரிக்கொள்கை
தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு நாம் அழுத்தங்களை பிரயோகிப்போம். கைது பயத்துக்கு அஞ்சி நாம் அமைதி காக்கப்போவதில்லை.
நாடாளுமன்றத்தில் தற்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அச்சட்டத்தை பயன்படுத்தி, ராஜபக்சக்கள் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ளனர் எனக் கூறப்படும் பணத்தை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும்.
அதற்கு நாம் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். அதுவரை ஓயமாட்டோம்.”என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்ச்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




